ராகுல்காந்தி வீட்டில் சமையல் வேலை செய்ய தயார்: ஓ.எஸ்.மணியன்

Webdunia
புதன், 2 மே 2018 (08:13 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயத்தில் ராகுல்காந்தியும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், அவர் நினைத்தால் கர்நாடக முதல்வரிடம் கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
 
இந்த நிலையில் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சீர்காழியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டால், அவரது வீட்டில் சமையல் வேலை செய்யவும் தயார் என்று கூறியுள்ளார். 
 
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல், இந்த விஷயத்தில் ராகுல்காந்தியை தேவையில்லாமல் அமைச்சர் குறைகூறுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments