தனிநபர் வந்து கேட்டால் எலி மருந்து போன்ற உயிர் கொல்லும் பொருட்களை தர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பல காலமாக மருந்து கடைகளில் விற்கும் எலி மருந்து உள்ளிட்ட ஆட்கொல்லி பொருட்களை தற்கொலைக்கு முயலும் பலர் வாங்கி சாப்பிட்டு இறப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் எலி மருந்து விற்க, வாங்க கட்டுப்பாடுகள் தேவை என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக மக்களிடையே உள்ளது,
இந்நிலையில் இதுகுறித்து இன்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதில் உயிரை மாய்த்துக் கொள்ள ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில் வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
அதேபோல மருந்து கடையில் தனி நபராக யாராவது வந்து சாணி பவுடர், எலி பேஸ்ட் போன்றவற்றை கேட்டால் தரக்கூடாது என்றும், முக்கியமாக சிறுவர்களுக்கு இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.