நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:03 IST)
2023ம் ஆண்டு நீட் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார் 
 
நீட் தேர்வு குறித்த மத்திய அரசின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினாலும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments