இந்த முறை ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கண்டிப்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியே ஆகவேண்டும். திரும்ப அனுப்புவதற்கான வாய்ப்பில்லை.
சரியான காரணங்கள் ஏற்கெனவே உள்ளடக்கிய சட்டமுன்வடிவுதான். அதை அவர் திரும்ப அனுப்பியது என்பதே ஒரு சரியான நடவடிக்கை அல்ல என்பது நேற்று அனைத்துக்கட்சித் தலைவர்களுமே சட்டமன்றத்தில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.