Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொத்து வரிகளை உயர்வு - கே.என்.நேரு விளக்கம்!

Advertiesment
சொத்து வரிகளை உயர்வு -  கே.என்.நேரு விளக்கம்!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:37 IST)
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சொத்து வரிகளை உயர்த்தியது குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். 

 
தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரிகளை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இன்று தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இது குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
 
சொத்து வரியை 2018 ஆம் ஆண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50%, குடியிருப்பு அல்லாத இதர கட்டடங்களுக்கு 100% வரி என அதிமுக அரசு உயர்த்தினார்கள். பின்னர் தேர்தல் வந்த காரணத்தினால் அதை நிறுத்தி வைத்தார்கள். இப்போது இதை சீராய்வு செய்து முதல்வர் ஏழைகள் அதிகமாக பாதிக்கப்படக்கூடாது என யோசித்து இம்முடிவு எடுத்துள்ளார். 
 
100% - 150% சொத்துவரி உயர்வு வெறும் 7% வீடுகளுக்கு மட்டும் தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்துவரி மிகவும் குறைவு. ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது என பேட்டியளித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!