Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் அரிசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (12:32 IST)
இந்தியாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பதாக கடந்த சில தினக்களாக வதந்திகள் பரவின. இதனால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.


 

இந்த சூழ் நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியபோது,  தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி உள்ளே நுழைய வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரிசி விற்கும் கடை, உணவகம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர். ஆனாலும் எங்கும் பிளாஸ்டி அரிசிகள் பிடிபடவில்லை.

இந்திலையில் தமிழ் முன்னணி மாலை பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த அமைச்சர் காமராஜ், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி எங்கும் இல்லை, சமூக வலைத் தளங்களில் இது குறித்து தேவையற்ற வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் பிளாஸ்டி அரிசி தமிழகத்தில் நுழைய வாய்ப்பில்லை என்றும், தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments