முதல்வர் வேட்பாளர் யார் என பேச்சு இருக்கும் நிலையில் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பல குழப்பங்களை சந்தித்து இப்போது ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்னும் 7 மாதத்தில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சு இப்போதே துவங்கியுள்ளது. முதலவர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் ராஜூ இது குறித்து கூறியதாவது, தேர்தலை பற்றி சிந்திப்பவர் அரசியல்வாதி. மக்களை பற்றி சிந்திப்பவர்கள் நாங்கள் என்று எம்.ஜி.ஆர். கூறுவார். அதே வழியில் தான் நாங்கள் பயணித்து வருகிறோம்.
தேர்தலுக்கு அவசரம் இல்லை. இன்று நாட்டில் ஒரு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தோடு வாழும் நிலை உள்ளது. இதனால் நம் மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
எங்கள் கவனம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, அதில் இருந்து மக்களை காப்பதில் மட்டுமே உள்ளது. தேர்தலை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் வரும்போது, மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்.