Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர்கள் திறப்பது எப்போது? சொன்னதையே சொல்லும் கடம்பூர் ராஜூ!!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (12:36 IST)
தியேட்டர்கள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவை விரைவில் அறிப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல். 

 
அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  அவை..  
 
1. 50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்
2. ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்
3. அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் 
4. திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது
5. ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
6. வெப்பநிலை பரிசோத்னைக்கு பிறகே ரசிகர்கள் திரப்படத்தை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்
7. திரைப்பட இடைவெளியின் போது எழுந்து வெளியே செல்லாமல் இருக்கையிலேயே இருக்கவும் அறிவுரை
 
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர், திரைப்படத்துறை, சின்னத்திரைக்கு பல்வேறு தளர்வுகளையும், நிதியுதவியையும் தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். 
 
தியேட்டர்களை திறந்தால் மூன்று மணி நேரம் சிறிய இடத்திற்குள் அதிக மக்கள் இருக்கும்படியான சூழல் உண்டாகும். எனவே, தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசும் தமிழக மருத்துவர் குழுவும் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் அதுகுறித்த முடிவை விரைவில் அறிப்பார் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments