Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை – மற்றொரு அதிமுக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு !

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (14:11 IST)
தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை பற்றாக்குறை வேண்டுமானால் இருப்பதாக சொல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. முக்கியமாக சென்னையில் மக்கள் தண்ணீருக்காக இரவு பகல் என்று பாராமல், கைகளில் காலி குடங்களையும், கேன்களையும் வைத்து காத்திருக்கின்றனர். தண்ணீர் பஞ்சம் காரணமாக தமிழக கிராமங்களில் சுனைகளிலும், ஊற்றுகளிலும், மக்கள் வெயிலில் கால் கடுக்க சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர்.

மக்கள் இப்படி பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் அதிமுக உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனக் கூறி மக்களை அதிருப்திக்குள்ளாக்கினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘தமிழகத்தில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்வோடு போராட்டம் நடத்துகின்றனர். 300 நாட்கள் சென்னை தண்ணீரை குடித்துவிட்டு, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துவரக் கூடாது  என துரைமுருகன் கூறுகிறார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது கிடையாது. பற்றாக்குறை வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதையும் அரசு 400 லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி சமாளித்து வருகிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments