பூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் பெற்ற ஜெயக்குமார் – வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிவு !

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (08:53 IST)
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நடைப்பயிற்சியின் போது பூம் பூம் மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்கிய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் அதிமுகவின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீடியாக்களை சந்திக்கும் நாட்களில் மீம் கிரியேட்ட்ர்ஸ்க்குக் கொண்டாட்டம்தான். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் வினோதமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் அவர் எதிரே வரும் பூம் பூம் மாட்டுக்காரரை நிறுத்தி அந்த மாட்டிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். அதை வீடியோவாக எடுத்து டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த டிவிட்டில் ‘பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி.. என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன். இன்றோ, நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களைக் கேலியாகப் பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments