Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க ரொம்ப ஒழுங்கோ... திமுக வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய ஜெயகுமார்!!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (13:29 IST)
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டிற்கு கருத்து தெரிவிக்கும் திமுகவை விமர்சித்துள்ளார் அதிமுக அமைச்சர் ஜெயகுமார். 
 
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் சம்மந்தபட்டவர்கள் அனைவரும் பாராப்ட்சம் இன்றி தண்டிக்கப்படுவார்கள் என அதிமுக தரப்பு கூறி வரும் நிலையில் திமுக இதனை விமர்சித்த வண்ணமே உள்ளது. எனவே, அமைச்சர் ஜெயகுமார் திமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டுள்ளார். அவர் பேசியதாவது, 
 
திமுக ஆட்சி காலத்தில் 2006 -2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முறைகேடுகளில் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது ஆதாரத்துடன் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. 
 
இதுமட்டும் அல்லாமல் பல ஊழல்களை செய்து ஊழல் கட்சியாக விளங்கும் திமுக தற்போது சிபிசிஐடி விசாரணையை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது. விரைவில் ஊழலின் ஊற்றாக விளங்கும் திமுக தனது ஆட்சி காலத்தில் டி.என்.பி.எஸ்.சி மூலம் 2006 - 2011 ஆம் ஆண்டு வரை செய்த முறைகேடுகளுக்காக சம்மந்தப்பட்டவர்கள் உள்ளே செல்லும் நிலை வரும் என எச்சரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்.. கவுண்ட் டவுன் தொடக்கம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகள்: மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவக் கழிவுகள்

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments