Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia

ஆளுனர் ஒப்புதலுக்கு பிறகே கவுன்சிலிங்! – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

Advertiesment
ஆளுனர் ஒப்புதலுக்கு பிறகே கவுன்சிலிங்! – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!
, ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (09:06 IST)
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய பிறகே கவுன்சிலிங் நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “ஆளுனர் ஒப்புதல் விரைவில் கிடைக்கும். ஆளுனர் ஒப்புதல் கிடைத்தப்பிறகே மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைனா போன் அடையாளத்தை உலக பிராண்டாக மாற்றியவர்! – சாம்சங் நிறுவன அதிபர் காலமானார்!