மகளிருக்கான திருமண உதவித்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலையில் விரைவில் அந்த திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கான திருமணத்துக்காக 8 கிராம் தங்கமும் 25000 ரூபாய் முதல் 50000 ரூபாய் பணமும் திருமண உதவித் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகள் இந்த திட்டத்தின் மூலம் பண உதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என மகளிர் உரிமைகள் துறை அமைச்சா் கீதா ஜீவன் என நேற்று அறிவித்துள்ளார். அவர் பேசியபோது கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பான கருத்துகள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனக் கூறியுள்ளார்.