Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேறு வீச்சு, திமுக பேனர் கிழிப்பு, மறியல் போராட்டம்.. இதுதான் திமுக ஆட்சி: பிரேமலதா

premalatha vijaynakanth

Mahendran

, வியாழன், 5 டிசம்பர் 2024 (17:36 IST)
அமைச்சர் மீது மக்கள் கோபத்தில் சேறு வீசுவது, நிவாரணம் உதவி கேட்டு மறியல் செய்வது, திமுக கொடிகள் கிழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தான் நிகழ்ந்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் பகுதிக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தேன். மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமைச்சர் செல்லும் போது, மக்கள் சேற்றை வாரி வீசுகின்றனர். திமுக பேனர்கள் கிழிக்கப்படுகின்றன. நிவாரணம் கேட்டு மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.

இதுதான் தற்போது திமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் கடமை. அதை ஏற்று நடந்தால் ஆட்சியையும் முதலமைச்சரையும் வரவேற்கலாம். எதிர்க்கட்சிகளை குறை கூறுவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

2000 ரூபாய் நிவாரண நிதி என்பது போதாது. புதுச்சேரியில் 5000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், தமிழக அரசு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பிரேமலதா தெரிவித்தார்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை தலைவர் பதவி.. தமிழக அரசு உத்தரவு..!