இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; அமைச்சர் துரை முருகன்

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (10:13 IST)
நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கிய நிலையில்  இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம் என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் துரை முருகன், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர்; ஆனால் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு என்றும் அமைச்சர் துரை முருகன் பேசினார்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments