பேச்சுவார்த்தை நடத்தினாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : அமைச்சர் துரைமுருகன்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (09:38 IST)
கர்நாடக மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினாலும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் உறுதிப்பட கூடியுள்ளார். 
 
கர்நாடக மாநிலம் கடந்த சில மாதங்களாக மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ள நிலையில் அதற்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
 
இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எழுத்து மூலமாக தெரிவித்தாலும் மேகதாது அணை கட்ட ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். 
 
மேலும்  தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்ட பயிர்களை காப்பாற்ற கர்நாடக மாநில அரசு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் இது குறித்து காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அரசுக்கு ஆணை இடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments