ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தால் அவரை எம்எல்ஏ ஆக்க தயார் என அமைச்சர் துரைமுருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆளுநர் சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் அந்த கருத்துக்களுக்கு ஆளும் திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தமிழக முதல்வரை நேரடியாக ஆளுநர் ரவியை தாக்கி பேசும் அளவுக்கு இரு தரப்புக்கும் சர்ச்சைகள் நீண்டு வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் பதவியே ராஜினாமா செய்துவிட்டு ரவி எம்எல்ஏவாக சட்டப்பேரவையில் வந்து விவாதம் செய்யட்டும் என்றும் அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்களே அவரை வெற்றி பெற வைத்து சட்டசபைக்கு அனுப்பி வைப்போம் என்றும் சட்டசபையில் வைத்து அவர் தாராளமாக தனது கருத்துக்களை விவாதம் செய்யலாம் என்றும் கூறினார்.
இல்லையென்றால் அவர் பாஜகவில் சேர்ந்தால் அவரை அமைச்சராக கூட ஆக்குவார்கள் என்றும் அவர் கூறினார், அமைச்சர் துரைமுருகனை இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.