Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலைக் கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (16:30 IST)
அதிமுக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 13ம் தேதி தனது சொந்த ஊர் சென்றுக் கொண்டிருந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலன் மோசமாகி வந்த நிலையில் அவருக்கு எக்மோ கருவி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்று அமைச்சரை நலம் விசாரித்து வந்தார்.

எனினும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் திடீரென மருத்துவமனை விரைந்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில் அமைச்சரின் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments