Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தமிழக அமைச்சர் சண்முகம்!

வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தமிழக அமைச்சர் சண்முகம்!

வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தமிழக அமைச்சர் சண்முகம்!
, ஞாயிறு, 7 மே 2017 (13:29 IST)
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில் வெளியிலில் அதிகமாக செல்வதை தவிர்கின்றனர்.


 
 
இந்நிலையில் கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்து கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
 
திண்டிவனம் திந்திணீஸ்வரர் கோவிலில் தேரோட்ட உற்சவம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். வழிபாடுகள் அனைத்தும் முடிந்த பின்னர் தேரின் வடத்தை பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைக்க அமைச்சர் தேரின் அருகில் வந்தார்.
 
அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் கூட்டத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்த அமைச்சர் மீண்டும் வடம் பிடித்து இழுத்து  விழாவை ஆரம்பித்து வைத்தார்.
 
அமைச்சர் காலையில் உணவு உண்ணாமல் வந்ததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் தான் மயங்கி விழுந்தார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலை சேர்த்து வைக்க மோடிக்கு கடிதம் எழுதிய இளைஞர்!