பொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்ததால் அதிமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய், அரிசி, கரும்பு, முந்திரி, திராட்சை போன்றவை வழங்கப்பட்டது. எப்பொழுதும் இல்லாதவாறு இம்முறை தமிழக அரசு 1000 ரூபாய் கொடுத்தது மக்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியது. பொங்கல் பரிசை வாங்க மக்கள் கூட்டம்கூட்டமாக ரேஷன் கடைகளுக்கு அலைமோதினர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஒவ்வொரு குடும்பமும் சந்தோஷமாக பொங்கலை கொண்டாட 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசால் அதிமுகவின் வாக்குவங்கி கணிசமாக அதிகரித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் பலத்தால் அதிமுக அமோக வெற்றி பெரும் என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இலவசத்தை நோக்கி மக்கள் ஓடும்வரை இவர்களை மாதிரி அரசியல்வாதிகள் மக்கள் தலையில் மிளக்காய் அரைத்துக்கொண்டே இருப்பார்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.