12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Webdunia
புதன், 12 மே 2021 (15:22 IST)
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது எப்போது என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார் 
 
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனையில் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் கல்வியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்த வேண்டும் என்பதே அனைவரும் கருத்தாக இருந்தது.
 
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்படாது என்றும் உறுதியாகக் கூறினார்
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவது எப்போது என சுகாதாரத்துறை தெரிவிக்கின்றதோ, அதன்பின்னர்தான் தேர்வு தேதி அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த ஆலோசனை விரைவில் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments