Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் .. சென்னை திரும்புகிறார்..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (12:24 IST)
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தர்மபுரிக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை கொடுத்ததாகவும் கூறப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போன் மூலம் அவரது உடல்நிலையை கேட்டு அறிந்தார். 
 
இந்த நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இன்று அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments