Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளிகல்வி துறையின் கடந்த காலத்தில் முறைகேடுகளை கிளறும் அன்பில் மகேஷ்?

பள்ளிகல்வி துறையின் கடந்த காலத்தில் முறைகேடுகளை கிளறும் அன்பில் மகேஷ்?
, செவ்வாய், 15 ஜூன் 2021 (12:02 IST)
பள்ளிகல்வி துறையில் கடந்த காலத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 
சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்து மாணவர்களுக்கான சேர்க்கை படிவத்தை வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. என்றும் மீதமுள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கியதும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
 
9-ம் வகுப்பில் பெற்ற மதிபெண்கள் அடிப்படையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றும்  தற்போதயை சூழலில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் அனைவரும் தேர்ச்சி என குறிப்பிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களை தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தினார்.
 
பள்ளிகல்வி துறையில் கடந்த காலத்தில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஒரு வாரத்தில் மாணவர் சேர்க்கையை முடித்து பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றும்  தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
ஆன்லைன் வகுப்புகள் குறித்த நடைமுறைகளை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளோம். தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஒரே வழி கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே. ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது, வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதரம் குறித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி-ஸ்டாலின் சந்திப்பு: என்னென்ன கோரிக்கைகள்?