தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியைப் பார்த்தோம்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் முடிந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகி வருகின்றன
இந்த நிலையில் இதுகுறித்து இன்று காலை பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறினார்
இந்த நிலையில் தற்போது அவர் அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை என்றும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறியுள்ளார்
மினி ஊரடங்கு என்றால் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கும் என்பது குறித்து மக்கள் இப்போதே கவலைப்பட தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது