Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"பால்வளத்துறை அமைச்சரோடு பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு"!

, திங்கள், 17 மே 2021 (14:28 IST)
தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ஆவடி. சா.மு.நாசர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் திரு. எஸ்.பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் திரு. எஸ்.முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ்.எம்.குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இன்று பிற்பகல் 1.00மணியளவில் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் குறைத்தமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.
 
அதனைத் தொடர்ந்து பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனத்தோடு நேரடி வர்த்தக தொடர்பு, ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தமிழ்நாடு முழுவதும் ஒரே அளவில் சதவிகித அடிப்படையில் வழங்க வேண்டும், பால் முகவர்கள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என பால்வளத்துறை சார்ந்த  சுமார் 30லட்சம் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு "பால்வளத்துறை நலவாரியம்" அமைக்க வேண்டும், பால்வளத்துறை சார்ந்தவர்களை கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும்,
 
ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பல நூறுகோடி ரூபாய் ஊழல், முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதற்கான ஆதாரங்களையும் வழங்கி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான கோரிக்கை மனுவை அளித்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்திற்கு இ-பாஸ் அனுமதி கிடையாது?! – தளத்தில் ஆப்ஷன் நீக்கம்!