Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம்!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (12:58 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலம் பெற வேண்டி உசிலம்பட்டியில் உள்ள திருமுருகன் கோவிலில் தேமுதிகவினர் பால் அபிஷேகம் செய்தனர்.


 
பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி உள்ள நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நுரையீரல் பிரச்சினை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டியும், மீண்டும் கம்பீரத்துடன் செயலாற்ற வேண்டியும் தேமுதிக மதுரை மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேமுதிக நிர்வாகிகள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கரிமாத்தூர்பாண்டி, எம்எஸ்மாணிக்கம், வில்லாணி செல்வம், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் சிவபிரகாஷ், உசிலம்பட்டி நகரச்செயலாளர் அசோகன்,

எழுமலை பேரூர் கழகச் செயலாளர் சேகர், முனியாண்டி,தங்கப்பாண்டி, ராமசாமி, ஆண்டிச்சாமி, முத்துகருப்பன், மூக்கன்,மொக்கைச்சாமி, ராமர், அழகுராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து  கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments