6 மாசம் சும்மா கிடந்த பார்சல்: வெடிகுண்டுகளை கண்டு ரயில்வே ஷாக்!!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (12:00 IST)
ரயில்வே குடோனில் 6 மாத காலமாக யாரும் உரிமை கோராத பார்சலில் வெடிகுண்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஏப்ரல் மாதம் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் நாக்பூரில் இருந்து சென்னை ரயில் நிலையத்திற்கு பார்சல் ஒன்று ராணுவம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த பார்சல் அக்டோபர் மாதம் வரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. 
 
பல மாதங்கள் கடந்து அந்த பார்சலை யாரும் உரிமை கோராததால் ரயில்வே நிர்வாகம் அதனை ரயில்வே குடோனுக்கு அனுப்பி வைத்தது. அங்கு பின்னர் அந்த பார்சலை ஏலத்தில் விட முடிவு செய்தனர். ஏலத்திற்கு முன்னர் அந்த பார்சலில் என்ன உள்ளது என சோதனை செய்துள்ளனர். 
 
அப்போது அதில் 10 வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு ரயில்வே நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும், 172 வது பட்டாலியனான அந்தமானுக்குப் பதில், 72வது பட்டாலியான சென்னைக்கு அந்த பார்சல் முகவரி மாறி வந்திருப்பதும் தெரியவந்தது. இந்த பார்சல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments