Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி முக்கொம்பை வந்தடைந்த காவிரி தண்ணீர்… விவசாயிகள் உற்சாக வரவேற்பு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (15:13 IST)
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று முக்கொம்பு பகுதியை வந்தடைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டும் இன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போதைய நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று காவிரி நீர் திருச்சி முக்கொம்பை வந்தடைந்துள்ளது.  இதையடுத்து விவசாயிகள் தானியங்கள் மற்றும் மலர்களை தூவி காவிரி நீரை வரவேற்றனர். நாளை காலை கல்லணை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments