நாளை பாசனத்திற்காக திறக்கப்படும் மேட்டூர் அணை!

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (20:30 IST)
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி நீர்மட்டத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு 100 அடி நீர்மட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.04 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது. 
 
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ளது. நாளை காலை பத்து மணிக்கு முதல்வர் அணையை திறக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் சொல்லி மாம்பழம் சின்னத்தை பெற்றுவிட்டார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு

விஜய்யின் திமுக வெறுப்பு அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது: திருமாவளவன்

மனைவியுடன் டிரம்ப் சென்ற போது திடீரென நிறுத்தப்பட்ட எஸ்கலேட்டர்.. சதி செய்தது யார்?

உலகில் உள்ள எல்லா நாடுகளையும் நானே காப்பாற்றனுமா? டிரம்ப் புலம்பல்..!

ஸ்லீவ்லெஸ் ஆடையை விமர்சனம் செய்த கடைக்காரர்.. சட்டக்கல்லூரி மாணவி கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments