Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேட்டூர் அணையில் இருந்து 20,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: வெள்ள எச்சரிக்கை

Advertiesment
மேட்டூர் அணையில் இருந்து 20,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: வெள்ள எச்சரிக்கை
, செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:31 IST)
மேட்டூர் அணையில் இருந்து தற்போது 20,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து படிப்படியாக, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்த நிலையில் காலை 5 மணிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு தற்போது படிப்படியாக 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
 
மேட்டூர் அணையில் 20000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்தது: விவசாயிகள் கவலை!