Publish Date: Tue, 30 Apr 2024 (17:04 IST)
Updated Date: Tue, 30 Apr 2024 (17:05 IST)
நாளை மே தினம் விடுமுறை என்பதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு விடுமுறை தினங்களில் மெட்ரோ ரயில்கள் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நாளை விடுமுறை தினத்தை சென்னையில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாளைய தினம் நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல் இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mahendran
Publish Date: Tue, 30 Apr 2024 (17:04 IST)
Updated Date: Tue, 30 Apr 2024 (17:05 IST)