அடுத்த 3 மணி 10 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
சனி, 14 மே 2022 (08:22 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அசானி புயல் கரையை கடந்தாலும் அதன் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் திருச்சி சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் இரண்டு நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதன் காரணமாக கோடை வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments