அடுத்த 2 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (10:55 IST)
அடுத்த இரண்டு மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அதுமட்டுமின்றி தென்மேற்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்றும் இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி அடுத்த இரண்டு மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேற்கண்ட 8 மாவட்டத்திலுள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments