Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நள்ளிரவு பூஜை; பெண்களை ஆபாச படம் பிடித்து பண வேட்டை; வருவாய் ஆய்வாளர் கைது

Advertiesment
நள்ளிரவு பூஜை; பெண்களை ஆபாச படம் பிடித்து பண வேட்டை; வருவாய் ஆய்வாளர் கைது
, வியாழன், 16 மார்ச் 2017 (13:25 IST)
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கணவருக்கு தெய்வீக எண்ணெய் தருவதாக கூறி நள்ளிரவு பெண்ணை பூஜைக்கு அழைத்து ஆபாச படம் எடுத்த வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். 


 

 
நாமக்கல் மாவட்டம் நாம்கிருப்பேட்டை அடுத்த அரியாகவுண்டாம்பட்டி பகுதியில் உள்ள சண்டி கருப்புசாமி கோயிலில், ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இவர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிக் கொண்டே கோயிலையும் கவனித்து வருகிறார்.
 
இந்நிலையில் கொல்லபட்டியைச் சேர்ந்த அண்ணாமலையின் மனைவி ராணி, ராஜேந்திரனை சந்தித்து அருள்வாக்கு வேண்டும் என கேட்டுள்ளார். ராஜேந்திரன் ராணியிடம் தான் தெய்வீக எண்ணெய் தருவதாகவும், அதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். பின்னர் தெய்வீக எண்ணெய் வேலை செய்ய பௌர்ணமி அன்று நள்ளிரவில் பூஜை செய்ய வேண்டியுள்ளதால் ராணியை தனியாக வரசொல்லி உள்ளார். 
 
இதையடுத்து பூஜைக்கு வந்த ராணியிடம் மஞ்சல் நிற சேலை கொடுத்து உடை மாற்றிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ராணி உடை மாற்றும்போது அதை புகைப்படம் எடுத்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இணையதளத்தில் வெளியிடமால் இருக்க அவ்வப்போது பணம் பறித்துள்ளார்.
 
பின் ராணி இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுகக்வில்லை. இதனால் ராணி இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்தில் ஆட்சியர், ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 
 
விசாரணையில், ராஜேந்திரன் கடந்த 16 ஆண்டுகளாக இதுபோன்று லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாக்லெட்டில் மயக்க மருந்து கொடுத்து மனைவியை நண்பருக்கு இரையாக்கிய கணவன்!!