Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக் விற்பனையாளருக்கு கத்தி குத்து – 2 லட்சத்தைக் கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்கள்!

Advertiesment
டாஸ்மாக் விற்பனையாளருக்கு கத்தி குத்து – 2 லட்சத்தைக் கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்கள்!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:01 IST)
உளுந்தூர் பேட்டை அருகே மது வாங்குவது போல வந்து டாஸ்மாக் ஊழியரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் மர்ம நபர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. அதில் வாசுதேவன், சந்திரசேகர்  ஆகியோர் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு கணக்கை சரிபார்த்து கடையை மூடியுள்ளனர் இருவரும்.

அப்போது மது வாங்குவது போல வந்த இருவரும், அவர்கள் கண்ணில் மிளகாய் பொடி தூவி, கழுத்தில் கத்தியால் வெட்டி 2 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். காயமடைந்த இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணக்கார கடவுளுக்கே இந்த நிலமையா? - வங்கி பணத்தை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு!