Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாதுவில் அணை விவகாரம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

Webdunia
புதன், 31 மே 2023 (18:41 IST)
மேகதாதுவில் அணை கட்டுவதற்காக  ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு.சிவக்குமார் தெரிவித்துள்ளதாக இன்று காலை  நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இதற்கு தமிழக ஆளுங்கட்சி மற்றும்  எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஓரு  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  கர்நாடக மாநில துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேகதாதுவில் அணை கட்ட முந்தைய பாஜக அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியும் மேகதாது விவகாரத்தை கையில் எடுத்திருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் பாஜகவும் காங்கிரசும், காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றன.

மேகதாதுவில் அணை கட்டினால் கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் முழு கவனம் செலுத்தி,காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை  முற்றிலுமாககைவிட கர்நாடக காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்த வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடைசியாக சிரியாவை தாக்கிய இஸ்ரேல்! - அதிர்ச்சி வீடியோ!

10 வயது சிறுமி வாயைப் பொத்தி வன்கொடுமை! குற்றவாளியை பிடிக்கவில்லை! - அண்ணாமலை விடுத்த வேண்டுகோள்!

புதுவையில் மாறுகிறதா கூட்டணி.. ஈபிஎஸ்-ஐ சந்திக்காத ரங்கசாமி.. விஜய்யுடன் கூட்டணியா?

காமராஜருக்கு ஏசி வசதி செய்துக் கொடுத்தாரா கருணாநிதி? - வைரலாகும் கருணாநிதியின் பழைய பதிவு!

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments