Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீரப்பன் கூட்டாளி மைசூர் சிறையில் மரணம்.. 31 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்..!

Advertiesment
வீரப்பன் கூட்டாளி மைசூர் சிறையில் மரணம்.. 31 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்..!
, திங்கள், 17 ஏப்ரல் 2023 (08:24 IST)
வீரப்பன் கூட்டாளி மீசை மாதவன் கடந்த 31 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதவன் என்பவர் உடல்நலக்குறைவால் மைசூர் அரசு மருத்துவமனையில் சற்றுமுன் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 31 ஆண்டுகள் சிறையில் இருந்த மீசை மாதையன் ஏப்ரல் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவு இழந்ததாகவும் இதையடுத்து அவர் மைசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் தெரிகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வீரப்பன் கூட்டாளி ட நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ஆயுத தண்டனையாக குறைத்தது. இதனை அடுத்து சைமன் பிலவேந்திரன் ஆகியோர் மைசூர் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு கர்நாடக போலீசில் மாதையன் சரணடைந்தார். அவர் மீது நான்கு வழக்குகள் பதிவாகி நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீட்டில் தூக்கு தண்டனை உறுதியானது. இந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் மீசை மாதவன் உயிரிழந்தார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மீண்டும் 500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகள் வருமா?