Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி!

Advertiesment
அமைச்சர் எஸ்ஆர்ராமச்சந்திரன்
, திங்கள், 17 மே 2021 (21:22 IST)
ராமசாமி ராஜா நகரில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. 
 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
 
பொது மக்களின் நலனுக்காக, ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், தெற்கு தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், ராமசாமி ராஜா நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் மிகவும் தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி  ஆலையை நிறுவியுள்ளது. இந்த ஆக்ஸிஜன் ஆலையை  ராஜபாளயம், விருதுநகர், சிவகாசி, அருப்புகோட்டை மற்றும் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவதற்காக அர்ப்பணித்துள்ளது.
webdunia
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் இந்த ஆலையை இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.ஆர்.கண்ணன், ஐ.ஏ.எஸ். அவர்கள் திறந்துவைத்தார்.
webdunia
ரூ .50 லட்சம் செலவில் நிறுவப்பட்ட இந்த ஆலை ஒரு நாளைக்கு 48 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் 45 லிட்டர் திரவ ஆக்ஸிஜன் திறன் உள்ளது, இது வாயு வடிவத்தில் 7000 லிட்டருக்கு சமம். நிமிடத்திற்கு 10 லிட்டர் என்ற விகிதத்தில், ஒரு சிலிண்டர் ஒரு நோயாளிக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இந்த ஆலையில் இருந்து தொடர்ந்து மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம், ஒவ்வொரு நாளும் சுமார் 24 உயிர்களை காப்பாற்ற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் 2 ஆம் முறையாக முதல்வராகும் பினராயி விஜயன் !