Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:28 IST)
வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான கோவில்களில் பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. திருப்பதி கோவில் லட்டு உள்பட பல கோவில்களின் பிரசாதங்கள் ஆன்லைனில் புக் செய்தால் தபால் மூலம் வருவது உண்டு.
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களும் தபால் மூலம் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
 
புகழ்பெற்ற கோயில்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தபால் மூலம் கோவில் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

அடுத்த கட்டுரையில்
Show comments