Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் மட்டுமே வந்தேன்; அவர்கள் யாரும் வரவில்லை - விஜயகாந்த் குற்றச்சாட்டு

நான் மட்டுமே வந்தேன்; அவர்கள் யாரும் வரவில்லை - விஜயகாந்த் குற்றச்சாட்டு
, திங்கள், 9 மே 2016 (11:59 IST)
வெள்ள பாதிப்பின்போது விருகம்பாக்கம் பகுதிக்கு நான் மட்டுமே வந்தேன். ஆனால் அதிமுக, திமுக நிர்வாகிகள் யாரும் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை விருகம்பாக்கத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 
அப்போது பேசிய விஜயகாந்த், ‘’விருகம்பாக்கம் பகுதிக்கு பல முறை வந்துள்ளேன். அண்மையில், வெள்ள பாதிப்பின்போது இந்தப் பகுதிக்கு நான் மட்டுமே வந்தேன். ஆனால் அதிமுக, திமுக நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
 
இந்த தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். நாங்கள் ஆறுமுகம். எங்களுக்கு எப்போதுமே ஏறுமுகம்தான். திராவிடக் கட்சிகள் தேமுதிக தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கின்றன.
 
காங்கிரஸ், திமுக இருவருமே கொள்ளையடிப்பதில் கூட்டாளிகள். 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என பல்வேறு ஊழல்களில் இந்த கட்சிகள் ஈடுபட்டன.
 
அதே போன்று அதிமுகவினர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, திமுக, அதிமுக இரண்டுமே விஷச் செடிகள். கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து கொள்ளையடித்து இருக்கின்றனர்.
 
மதுவிலக்கே முடியாது என்ற அதிமுக, இப்போது தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியிருக்கின்றனர். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
 
தேர்தல் முடிவுகள் குறித்து பல கருத்துக்கணிப்புகள் வருகின்றன. தங்களுக்கு வேண்டிய ஊடகங்கள் மூலம் இரு கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதிலும் அவர்களுக்கு கூட்டணிதான். இவையெல்லாம் கருத்துத் திணிப்புகள் மட்டும்தான்.
 
திமுக, அதிமுகவிடம் பணபலம் உள்ளது. என்னிடம் மனபலம் உள்ளது. இன்னும் 10 நாள்கள் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டிவிடுங்கள். மக்கள் நலக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்’’ என்று கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நின்றிருந்த வேன் மீது லாரி மோதி 9 பேர் பலி : தூத்துக்குடி அருகே பயங்கரம்