புயலுக்கே புயல் கிளப்பிய பத்திரிக்கையாளர்கள் - மன்னிப்புக் கோரிய வைகோ
புயலுக்கே புயல் கிளப்பிய பத்திரிக்கையாளர்கள் - மன்னிப்புக் கோரிய வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருவதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, அவரிடம் பேட்டி எடுக்க அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். அப்போது, மதிமுக தேர்தல் தோல்விக்கு பத்திரிகைகள்தான் காரணம் என அக்கட்சி நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை அவமரியாதை செய்து, தரக்குறைவாகப் பேசி வெளியேற்றினர்.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்கள் வைகோ வரும்வரை காத்திருந்து, அவர் வந்தவுடன் அவரது காரை மறித்து மறியல் செய்தனர்.
இதனால், பதறித்துடித்த வைகோ, காரை விட்டு உடனே இறங்கி வந்து பத்திரிக்கையாளர்களிடம் விவரம் கேட்டார். அப்போது நடந்தவைகள் குறித்து அறிந்து கடும் வேதனை அடைந்தார்.
மேலும், நடைபெற்ற சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார். இதனால் பத்திரிக்கையாளர்கள் சமதானம் அடைந்து மறியலை கைவிட்டனர்.