வெளியே மதிமுக கொடி.. உள்ளே மோடி புகைப்படம்! மதிமுக கூட்டத்தில் அதிர்ச்சி!

Prasanth K
வெள்ளி, 11 ஜூலை 2025 (12:20 IST)

மதிமுக கூட்டத்திற்கு வந்த உறுப்பினரின் காருக்குள் பிரதமர் மோடியின் படம் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடுகளிலும், கூட்டணி பேச்சுவார்த்தையிலும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடந்து திமுகவுடன் தான் கூட்டணி என கூறி வரும் நிலையில், வேறு கட்சிகளிடம் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் மதிமுக கட்சி தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அவ்வாறாக இன்று சென்னை மண்டலத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்த மதிமுக பிரமுகர் ஒருவரின் காருக்குள் பிரதமர் மோடியின் போட்டோ இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதிமுக தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட மதிமுக பிரமுகர் காரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்ததால் அவர் கட்சி மாறப் போகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments