Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயசூரியனில் மதிமுக வேட்பாளர்! இதுக்கு கட்சியை திமுகவுடன் இணைச்சிடலாமே?

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (11:14 IST)
தமிழகத்தில் சுமார் 20 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தி வரும் வைகோ, திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டது குறித்து மதிமுகவினர்களே விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக  வைகோ அறிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஒருசில மாவட்டங்களில் மட்டுமே வாக்கு சதவீதம் வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியே ஒரு தொகுதியில் தைரியமாக 'பானை' சின்னத்தில் போட்டியிடும்போது, தமிழகம் முழுவதும் வாக்கு சதவிகிதத்தை வைத்துள்ளதாக கூறப்படும் வைகோவின் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலாக கட்சியை திமுகவுடனே இணைத்துவிடலாமே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் மதிமுகவின் கணேசமூர்த்தி திமுக எம்பியாகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தயாநிதி அழகிரி உள்ளிட்ட சிலர் மதிமுக திமுகவுடன் விரைவில் இணைந்துவிடும் என்று கூறி வரும் நிலையில், வைகோவின் இந்த முடிவு அதனை உறுதி செய்வதுபோல் தோன்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments