Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகநீதி கூட்டமைப்பில் இணைந்தது மதிமுக! – வைகோ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (12:39 IST)
திமுக தலைவர் தொடங்கிய சமூகநீதி கூட்டமைப்பில் மதிமுக இணைவதாக வைகோ அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்னும் கட்சிகளின் கூட்டமைப்பை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பாமக உள்ளிட்ட 34 அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இந்த சமூகநீதி கூட்டமைப்பில் இணைவதாக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் காஷ்மீரின் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை அறிவித்தன. அதை தொடர்ந்து தற்போது மதிமுக கட்சியும் சமூகநீதி கூட்டணியில் இணைவதாக அக்கட்சி பொதுசெயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுகவின் சமூகநீதி கூட்டமைப்பு பிரதிநிதியாக ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை: முன்னாள் முதல்வர் மகன் திடீர் பாதயாத்திரை..!

சீமானின் கடுமையான விமர்சனம்.. பதிலடி கொடுக்க திட்டம்.. நாளை தவெக அவசர ஆலோசனை..!

44 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தவர்.. பாஜகவில் இணைந்தவுடன் பதவி..!

கேரளாவில் ரயில் விபத்து.. 4 தமிழக தூய்மை பணியாளர்கள் பரிதாப மரணம்..!

இறக்குமதி ஐட்டம்: ஷைனாவிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments