Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த எம்பிஏ படித்த பெண் கைது!

யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த எம்பிஏ படித்த பெண் கைது!
, திங்கள், 4 மார்ச் 2019 (13:01 IST)
யூடியூப் என்பது அளவில்லா விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு பொக்கிஷம். குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இந்த இணையதளம் பெரும் பயனை கொடுத்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த யூடியூபை ஒருசிலர் கிரிமினல் குற்றங்கள் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடலூரை சேர்ந்த ஒரு பெண், யூடியூபை பார்த்து ரூ.2000 கள்ளநோட்டு அச்சடித்து மாட்டிக்கொண்டார்
 
கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையோர கடையில் பரணி குமாரி என்ற பெண் ரூ.2000 கள்ள நோட்டை மாற்ற முயன்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த கடைக்காரர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணை விசாரணை செய்த முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தார்.
 
அதன்பின் நடந்த விசாரணையில் அவரிடம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் நடந்த விசாரணையில் அவரது பெயர் பரணி குமாரி என்பது தெரிய வந்தது.
 
webdunia
மேலும் பரணிகுமாரி கடன் தொல்லையால் அவதிப்பட்டிருந்ததாகவும், கடன் தொல்லையில் இருந்து விடுபட கள்ள நோட்டு அடிக்க முடிவு செய்ததாகவும்,  யூடியூப் வீடியோக்களை பார்த்து கள்ளநோட்டு அடிக்க கற்று கொண்டதாகவும், பரணி குமாரி வாக்குமூலம் அளித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ள இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குலதெய்வ கோயிலுக்கு சென்றபோது விபரீதம்: பேருந்து மோதி 4 பேர் சாவு