Publish Date: Mon, 28 Mar 2022 (12:46 IST)
Updated Date: Mon, 28 Mar 2022 (12:49 IST)
வளசரவாக்கத்தில் தனியார் பள்ளியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தீட்சித். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற தீட்ஷித் பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுள்ளான். அப்போது பள்ளி வேன் ஒன்று மாணவர்களை இறக்கி விட்டுவிட்டு பின்னோக்கி வந்துள்ளது.
அந்த வேனின் டிரைவர் பூங்காவனம் பின்னால் சிறுவன் செல்வதை கவனிக்காமல் வேனை இயக்கியதில் வேன் மோதி சிறுவன் தீட்ஷித் உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் டிரைவர் பூங்காவனத்தை கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனம் மோதியதில் 2 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலல் அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் பள்ளியில் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.