Publish Date: Mon, 02 May 2022 (12:41 IST)
Updated Date: Mon, 02 May 2022 (12:43 IST)
தமிழ்நாட்டில் பள்ளி பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் தராத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரக எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாநில பாடத்திட்ட அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சில தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு அப்பள்ளி நிர்வாகங்கள் ஹால்டிக்கெட் தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், கல்வி கட்டணம் செலுத்தா விட்டாலும் அனைத்து மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட வேண்டும். கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி ஹால்டிக்கெட் தர மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.