Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக விலைக்கு விற்கப்படும் முக கவசம், கிருமிநாசினி?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (10:01 IST)
சென்னையில் முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து விற்கப்படுகிறது.

 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,945 என்றும் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 என்றும் சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பதை சாதகமாக பயன்படுத்தி முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து விற்கப்படுவது தெரியவந்துள்ளது. ரூ.3 மற்றும் ரூ.4 மதிப்புள்ள முக கவசங்கள் கையிருப்பில் இருந்தாலும் அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்காமல் மற்ற முக கவசங்களை ரூ.150 மற்றும் ரூ.200-க்கு விற்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

முக கவசங்கள், கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்தால் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

என்95 முக கவசத்தின் விலை ரூ.22 ஆகவும், 2 அடுக்கு அறுவை சிகிச்சை முக கவசத்தின் விலை ரூ.3 ஆகவும், 3 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.4 ஆகவும் அரசு நிர்ணயித்தது.

இதேபோல் 200 மி.லி கிருமி நாசினியின் விலை ரூ.110, ஒரு ஜோடி கையுறைகள் ரூ.11, பிபீ கிட் விலை ரூ.273 என அரசு நிர்ணயித்தது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Gold Price Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு?

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments