ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட தினத்தன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு இன்றுவரை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிலர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வரும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
திருமணம் முடிந்த கையோடு கார்த்திக் - சினேகா என்ற புதுமணத்தம்பதிகள் இன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.