Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீரா பானம் சந்தைப்படுத்துதல் சாத்தியமாகாது ! எங்கே போனது சிகப்பு முக்கோண திட்டம் - செ.நல்லசாமி

நீரா பானம் சந்தைப்படுத்துதல் சாத்தியமாகாது ! எங்கே போனது சிகப்பு முக்கோண திட்டம் - செ.நல்லசாமி
, சனி, 19 அக்டோபர் 2019 (21:33 IST)
நீரா பானம் சந்தைப்படுத்துதல் சாத்தியமாகாது ! எங்கே போனது சிகப்பு முக்கோண திட்டம், மத்திய மாநில அரசு மீண்டும் குடும்ப கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி பேட்டியளித்துள்ளார்.

கரூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளருமான செ.நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தினந்தோறும் நீர் பங்கீடு முறை என்ற அம்சம் இருந்திருந்தாலும், அல்லது காவிரி தீர்ப்பினை மதித்து கர்நாடகம் தந்து மாதாந்திர முறையில் தந்திருந்தாலும், குறுவை சாகுபடி சாத்தியம் ஆகி இருக்கும், அப்படி குறுவை சாகுபடி சாத்தியம் ஆகி இருந்தால் நடப்பு ஆண்டில் கடலுக்கு சென்ற உபரிநீர் சென்று இருக்காது.

தமிழ்நாட்டில் நிபந்தனைகள் இன்றி நீரா இறக்குவதற்கு அனுமதி அளித்தால் மட்டுமே, நீராவை இறக்கி சந்தைப்படுத்துதல் முறை வெற்றி பெறும் என்றதோடு, உதாரணத்திற்காக பசுமாட்டிற்கு வாய்ப்பூட்டு போட்டு, அதை அப்படியே மேய விட்டால் எப்படியோ அப்படி தான் நீரா பானம் இறக்குவதற்கு அரசு நிபந்தனைகளுடன் கட்டுப்பாடு விதித்துள்ளது. தனிநபர் காப்பீடு போல, ஆயுள் காப்பீடு மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே, காப்பீடு சாத்தியம் ஆகும், மாற்றியமைக்காத வரை பயிர்க்காப்பீடு என்பது காப்பீடு நிறுவனங்களின் வேட்டைக்காடாக இருக்கும் என்றார். உலக அளவில் வந்திருக்கும் நெருக்கடிக்கு மக்கள் தொகைப்பெருக்கமே மூலக்காரணம், உலகினுடைய மக்கள் தொகை 100 கோடியை சுற்றியே வந்தது. ஆனால், நாம் வாழும் இந்த காலத்தில் 750 கோடி, 2100 ஆம் ஆண்டில் 1000 கோடியை தாங்கும் என்று அஞ்சப்படுகின்றது.

சுதந்திரத்தின் போது இந்தியாவின் மக்கள் தொகை 28 கோடி, இன்று 130 கோடி, நாடு நாற்றாங்கால் ஆகி விட்டது. உலகம் சூடாக மாறி விட்டதற்கும், வன நிலங்கள் காடுகளிலிருந்து வீடுகளுக்கு இடம்பெயர காரணம் மக்கள் தொகை பெருக்கமே காரணம், இது பற்றி,1976 ஆம் ஆண்டில் எங்கும் இருந்த சிகப்பு முக்கோணம் தற்போது எங்கே சென்றது என்பது தெரியவில்லை, ஆகவே, மக்கள் தொகைப்பெருக்கம் கட்டுப்பாடு விதிக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தினை அமல்படுத்தி சீனாவை பின்பற்றி அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம் ஆகும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம், இதன் மூலம் நீர்தட்டுப்பாட்டினை நீக்க முடியும் என்றார்.

மேலும், காவிரி – கோதாவரி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு பாண்டியாறு, போயாறு திட்டத்தினை நிறைவேற்றிட வேண்டுமென்றார். பேட்டியின் போது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநிலத்தலைவர் கார்வேந்தன் உடனிருந்தார்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருது மொழியை தடை செய்ய வேண்டும், சீமானை கைது செய்ய வேண்டும் - கல்கி ராஜசேகர்